கூனி சென்றபின் கைகேயி தன் கோலம் அழித்தல்
தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள்.1
விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்னக்
கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல்
அளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள்.
தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். 3
நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன,
‘கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை. 4
கைகேயின் மாளிகைக்கு தயரதன் வருதல்
ஆழி நெடுங் கை மடங்கல் ஆளி அன்னான். 5
தயரதன் கைகேயியை நெருங்குதல்
ஆயிழைதன்னை அடைந்த ஆழி மன்னன். 6
தயரதன் கைகேயியை எடுத்தலும் அவள் மன்னன் கையை தள்ளி மண்ணில் வீழ்தலும்
தடங்கைகள் கொண்டு தழீஇ, எடுக்கலுற்றான். 7
நின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,
மின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்;
ஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள்மன்றல்
அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள். 8
கைகேயின் நிலைகண்ட தயரதன் நிகழ்ந்தது கூற வேண்டுதல்
சொன்னபின் என்செயல் காண்டி; சொல்லிடு” என்றான். 9
கைகேயி தயரதனிடம் தன் வரத்தை வேண்டுதல்
பண்டைய இன்று பரிந்து அளித்தி’ என்றாள். 10
தயரதன் வரத்தை தர வாக்குறுதி அளித்தல்
வள்ளல் இராமன் உன்மைந்தன் ஆணை’ என்றான். 11
கைகேயி முன்னர் கொடுத்த வரங்களை தருமாறு வேண்டல்
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி’ என்றாள். 12
விரும்பியதை கேட்க தயரதன் கூறுதல்
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான். 13
கைகேயின் இருவரங்கள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள். 14
தயரதனின் துயரம்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். 15
பூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்?
வேதனை முற்றிட, வெந்து வெந்து, கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன, வெய்து உயிர்த்தான். 16
உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம்
புலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;
சலம் தலைமிக்கது; ‘தக்கது என்கொல்?’ என்று என்று
அலந்து அலையுற்ற, அரும் புலன்கள் ஐந்தும். 17
மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;-
ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான். 18
பெண் என உட்கும்; பெரும் பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து, உயிர்த்து, உலாவும்;
கண்ணினில் நோக்கும் அயர்க்கும்; வன் கைவேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான். 19
தேவரின் நடுக்கமும், கைகேயின் கலங்கா உள்ளமும்
கம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன்
வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு, வெய்துற்று,
உம்பர் நடுங்கினர்; ஊழி பேர்வது ஒத்தது;
அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால். 20
அஞ்சலள்; ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம்
நஞ்சிலள்; ‘நாண் இலள்’ என்ன, நாணம் ஆமால்;
‘வஞ்சனை பண்டு மடந்தை வேடம்’ என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர். 21
கைகேயின் மனமாற்றத்திற்கான காரணத்தை தயரதன் வினவுதல்
உன் நிலை சொல்; எனது ஆணை உண்மை!’ என்றான். 22
கைகேயின் தீஞ்சொற்கள்
வசைத் திறன் நின் வயின் நிற்க, மாள்வென்’ என்றாள். 23
கைகேயின் கடுமொழி கேட்ட தயரதனின் பெருந்துயரம்
இந்த நெடுஞ்சொல் அவ் ஏழை கூறு முன்னே,
வெந்த கொடும்புணில் வேல் நுழைந்தது ஒப்பச்
சிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன். 24
‘ஆ கொடியாய்!’ எனும்; ஆவி காலும்; ‘அந்தோ!
ஓ கொடிதே அறம்!’ என்னும்; ‘உண்மை ஒன்றும்
சாக!’ எனா எழும்; மெய் தளாடி வீழும்ம
¡கமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான். 25
‘”நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும்” என்னக்
கூரிய வாள்கொடு கொன்று, நீக்கி, யானும்
பூரியர் எண்ணிடை வீழ்வன்; என்று, பொங்கும்
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான். 26
கையடு கைகள் புடைக்கும்; வாய் கடிக்கும்;
‘மெய்யுரை குற்றம்’ எனப் புழுங்கி விம்மும்;
நெய்யெரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும்;
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன். 27
இரந்தாவது கைகேயின் மனத்தை மாற்ற தயரதன் எண்ணி எழுதல்
இறுப்பினும் ஆவது இரப்பது’ என்று எழுந்தான். 28
தயரதன் கைகேயின் காலில் விழுந்து இரத்தல்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான். 29
‘கொள்ளான் நின் சேய் இவ் அரசு; அன்னான் கொண்டாலும்
நள்ளாது இந்த நானிலம்; ஞாலம் தனில் என்றும்
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய்;
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன்?’ என்றான். 30
‘வானோர் கொள்ளார்; மன்னவ உய்யார்; இனி, மற்று என்
ஏனோர் செய்கை? யாரொடு நீ இவ் அரசு ஆள்வாய்?
யானே சொல்ல, கொள்ள இசைந்தான்; முறையாலே
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை’ என்றான். 31
‘”கண்ணே வேண்டும்” என்னினும், ஈயக் கடவேன்; என்
உள் நேர் ஆவி வேண்டினும், இன்றே உனதன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!- பெறுவாயேல்,
மண்ணே! கொள் நீ; மற்றையது ஒன்றும் மற’ என்றான். 32
‘வாய் தந்தேன் என்றேன்; இனி, யானோ அது மாற்றேன்;
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே;
தாய் தந்தென்ன, தன்னை இரந்தால், தழல் வெங் கண்
பேய் தந்தீயும்; நீ இது தந்தால் பிழை ஆமோ?’ 33
தயரதனின் வேண்டுகோளை கைகேயி மறுத்தல்
என்னே? மன்னா! யாருளர் வாய்மைக்கு இனி? என்றாள். 34
கைகேயின் உரைகேட்ட தயரதன் மூர்ச்சித்து பின் தெளிந்து பேசுதல்
மூச்சு அற்றார்போல் பின்னும் இரந்தே மொழிகின்றான்; 35
‘நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்; உரை குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும்
நன் மகன், இந்த நாடு இறவாமை நய’ என்றான். 36
‘மெய்யே என் தன் வேர் அற நூறும் வினை நோக்கி
நையா நின்றேன், நாவும் உலர்ந்தேன்; நளினம்போல்
கையான், இன்று, என் கண் எதிர்நின்றும் கழிவானேல்,
உய்யேன்; நங்காய்! உன் அபயம் என் உயிர்’ என்றான். 37
தந்த வரத்தை தவிர்க்க கூறுதல் அறமா என கைகேயி கூறுதல்
உரந்தான் அல்லால், நல்லறம் ஆமோ? உரை’ என்றாள். 38
சோகத்தால் தயரதன் மண்ணில் விழுந்து புலம்புதல்
இடியேறு உண்ட மால் வரை போல், மண்ணிடை வீழ்ந்தான். 39
வீழ்ந்தான்; வீழா, வெந் துயரத்தின் கடல் வெள்ளத்து
ஆழ்ந்தான்; ஆழா, அக் கடலுக்கு ஓர் கரை காணான்;
சூழ்ந்தாள் துன்பம் சொற் கொடியாள், சொல்கொடு நெஞ்சம்
போழ்ந்தாள், உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான். 40
தயரதன் கைகேயியை பழித்துக் கூறுதல்
கொன்றார் இல்லை; கொல்லுதியோ நீ? – கொடியோளே! 41
‘ஏவம் பாராய்; இல் முறை நோக்காய்; அறம் எண்னாய்;
“ஆ” என் பாயோ அல்லை; மனத்தால் அருள் கொன்றாய்;
நா அம்பால், என் ஆர் உயிர் உண்டாய்; இனி, ஞாலம்
பாவம் பாராது, இன் உயிர் கொள்ளப் படுகின்றாய்! 42
‘ஏண்பால் ஓவா நாண், மடம், அச்சம் இவையே தம்
பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்; புகழ் பேணி
நாண்பால் ஓரா நங்கையர் தம்பால் நணுகாரே;
ஆண்பாலாரே; பெண்பால் ஆரோடு அடைவு அம்மா? 43
‘மண் ஆள்கின்றார் ஆகி, வலத்தால் மதியால் வைத்து
எண்ணா நின்றார் யாரையும், எல்லா இகலாலும்,
விண்ணோர்காறும், வென்ற எனக்கு, என் மனை வாழும்
பெண்ணால் வந்தது, அந்தரம் என்னப் பெறுவேனோ?’ 44
என்று, என்று, உன்னும்; பன்னி இரக்கும்; இடர் தோயும்;
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும்; ‘உயிர் உண்டோ?
இன்று! இன்று!’ என்னும் வண்ணம் மயங்கும்; இடையும்-பொன்
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்னக் குவி தோளான். 45
கைகேயி தயரதனிடம் ‘உரை மறுத்தால் உயிர் விடுவேன்’ எனக் கூறுதல்
பாழிப் பொன் – தார் மன்னவ!’ என்றாள், பசை அற்றாள். 46
‘அரிந்தான், முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி,
வரிந்து ஆர் வில்லாய்! வாய்மை வளர்ப்பான்! வரம் நல்கி,
பரிந்தால், என் ஆம்?’ என்றனள் – பாயும் கனலேபோல்,
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள். 47
தயரதன் கைகேயிக்கு வரம் அளித்தல்
நீந்தாய், நீந்தாய், நின் மகனோடும் நெடிது!’ என்றான். 48
வரம்தந்த தயரதன் துயருற, கைகேயி உறங்குதல்
ஊறா நின்ற சிந்தையினாளும் துயில்வுற்றாள். 49
கொடிய இரவு கழிதல்
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே. 50
கோழி கூவுதல்
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே. 51
பல் வகைப் பறவைகளின் ஒலிகள்
மா கயத்தியை, உள் கொதித்து, மனத்து வைவன போன்றவே. 52
யானைகள் துயில் நீங்கி எழுதல்
‘யாமும் இம்மண் இறத்தும்’ என்பன போல் எழுந்தன – யானையே. 53
வானத்து நட்சத்திரங்கள் மறைதல்
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என, மீன் ஒளித்தது – வானமே. 54
காலையில் மணமுரசு ஒலிக்க மகளிர் எழுதல்
மாமயிற்குலம் என்ன, முன்னம் மலர்ந்தெழுந்தனர், மாதரே. 55
மந்தமாருதம் வீசுதல்
கனவினுக்கு இடையூறு அடுக்க, மயங்கினார் சில கன்னிமார். 56
குமுதமலர்கள் குவிதல்
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த – வண் குமுதங்களே. 57
பண்கனிந்து எழும் பாடல்
பை அரா நுழைகின்ற போன்றன – பண் கனிந்து எழு பாடலே. 58
ஆடவர் பள்ளி எழுதல்
வாழு நாள் இது’ என எழுந்தனர் – மஞ்சு தோய்புய மஞ்சரே. 59
மகளிர் பள்ளி எழுதல்
பொய் உறங்கும் மடந்தைமார் – குழல் வண்டு பொம்மென விம்மவே. 60
ஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல்
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே. 61
பல் வகை ஒலிகள்
மழை ஒலித்தனபோல் கலித்த, மனத்தின் முந்துறு வாசியே. 62
தீபங்கள் ஒலி மழுங்குதல்
தெய்வ மேனி படைத்த சேயளி போல் மழுங்கின – தீபமே. 63
பல் வகை பாடற் கருவிகளின் இசையலி
சங்கு இயம்பின; கொம்பு அலம்பின, சாம கீதம் நிரந்தவே. 64
சூரியோதயம்
கோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன், குண குன்றிலே. 65
தாமரை மலர்கள் மலர்தல்
பாவை மார்முகம் என்ன முன்னம் மலர்ந்த பங்கய ராசியே. 66
முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் அயோத்தி நகர மக்களின் நிலை
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்றபெற்றி உணர்த்துவாம். 67
முடிசூட்டு விழாவிற்கு மங்கையர் அலங்கரித்துக் கொள்ளல்
நஞ்சினை இடுவார்; நாள் மலர் புனைவார். 68
நகரத்து குமாரர்களின் மகிழ்ச்சி
குங்குமச் சுவடு நீங்காக் குவவுத் தோள் குமரர் எல்லாம். 69
நகரத்தவர் அனைவரின் மன நிலை
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார். 70
முடிசூட்டு விழாவிற்கு அரசர்கள் வருதல்
அமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின், அரச வெள்ளம். 71
வீதிகளில் மக்கள் வெள்ளமென திரண்டிருத்தல்
போகில; மீளகில்லா – பொன் நகர் வீதி எல்லாம். 72
பெருந்திரளான மக்கள்
தேர்ந்ததே தேரின் அல்லால், யாவரே தெரியக் கண்டார்? 73
மகளிர் கூட்டம்
துவளும் நுண் இடையார், ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார். 74
முடி சூட்டு விழாவிற்கு வராதவர்
விலங்கலும், ஆசை நின்ற விடா மத விலங்கலேயால். 75
மன்னர்கள் திருமுடி சூட்டும் மண்டபம் புகுதல்
வந்தனர்; மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார். 76
முன் பயந்து எடுத்த காதல் புதல்வனை முறையினோடும்
இற் பயன் சிறப்பிப்பாரின், ஈண்டிய உவகை தூண்ட,
அற்புதன் திருவைச் சேரும் அரு மணம் காணப் புக்கார் –
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறைக் கிழவர் எல்லாம். 77
பல் வகை நிகழ்ச்சிகள்
எண் அருங் கனக மாரி எழுதிரைக் கடலுந் தூர்த்த. 78
ஒளிவெள்ளம்
‘வளைக்கலாம்’ என்று, அவ் வானோர் கண்ணையும் மறைத்த அன்றே. 79
வசிட்ட முனிவன் வேதியரோடு வருதல்
வாயில்கள் நெருக்கம் நீங்க, மாதவக் கிழவன் வந்தான். 80
வசிட்ட முனிவனின் செயல்
சிங்க ஆசனமும் வைத்துச் செய்வன பிறவும் செய்தான். 81
வசிட்டனின் கட்டளைப்படி தயரதனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல்
பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான். 82
கைகேயி சுமந்திரனிடம் இராமனை அழைத்து வருமாறு கூறுதல்
பெண்டிரில் கூற்றம் அன்னாள், ‘பிள்ளையைக் கொணர்க’ என்றாள். 83
கைகேயி கட்டளைப்படி சுமந்திரன் இராமனை அழைத்துவரச் செல்லுதல்
‘என்றனள்’ என்னக் கேட்டான்; எழுந்தபேர் உவகை பொங்கப்
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கிப் புக்கான்,
தன் திரு உள்ளத் துள்ளே தன்னையே நினையும் மற்று அக்
குன்று இவர் தோளினானைத் தொழுது, வாய் புதைத்து, கூறும்: 84
சுமந்திரன் இராமனை திருமுடி சூட்ட விரைவில் வருமாறு அழைத்தல்
பொன் தட மகுடம் சூடப் போகுதி விரைவின்’ என்றான். 85
இராமன் தேரேறி செல்லுதல்
தையலார் இரைத்து நோக்கத் தாரணி தேரில் சென்றான். 86
தேரில் செல்லும் இராமனைக் கண்ட மகளிர் செயல்கள்
பொரு அரு தேரில் செல்ல, புறத்திடைக் கண்டார் போல்வார். 87
துண்ணெனும், சொல்லாள் சொல்லச் சுடர்முடி துறந்து, தூய
மண்ணெனும் திருவை நீங்கி, வழிக்கொளா முன்னம், வள்ளல்
பண்ணெனும் சொல்லினார் தம் தோளெனும் பணைத்த வேயும்,
கண்ணெனும் கால வேலும் மிடைநெடுங் கானம் புக்கான். 88
சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து,
வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும்;
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை
கண் உறப் பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும்; 89
‘”அங்கணன் அவனி காத்தற்கு ஆம் இவன்” என்னல் ஆமோ?
நம் கண் அன்பு இலன்’ என்று, உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார்,
‘செங்கணும், கரிய கோல மேனியும், தேரும் ஆகி,
எங்கணும் தோன்றுகின்றான்; எனைவரோ இராமன்?’ என்பார். 90
இராமனைக் கண்ட முனிவர் முதலியோர் நினைப்பும் பேச்சும்
நினைவன மனத்தால், வாயால் நிகழ்ந்தது, நிகழ்த்தலுற்றாம்: 91
‘உய்த்தது இவ்வுலகம்’ என்பார்; ‘ஊழி காண் கிற்பாய்’ என்பார்;
‘மைந்த! நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும்’ என்பார்;
‘ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக’ என்பார்;
‘பைந் துழாய்த் தெரியலாய்க்கே நல்வினை பயக்க’ என்பார். 92
‘உயர் அருள் ஒண்கண் ஒக்கும் தாமரை, நிறத்தை ஒக்கும்
புயல்மொழி மேகம், என்ன புண்ணியம் செய்த!’ என்பார்;
‘செயலருந் தவங்கள் செய்திச் செம்மலைத் தந்த செல்வத்
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது?’ என்பார். 93
‘வாரணம் அரற்ற வந்து, கராவுயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார்;
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கிக்
காரணம் இன்றியேயும், கண்கள் நீர் கலுழ நிற்பார். 94
‘நீலமா முகில் அனான் தன் நிறைவினோடு அறிவு நிற்க,
சீலம் ஆர்க்கு உண்டு? கெட்டேன்! தேவரின் அடங்கு வானோ?
காலமா கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய், முடிவிலாத மூர்த்தி இம் முன்பன்’ என்பார். 95
‘ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தைப்
போர்கெழு புலவர்க்கு ஆகி அசுரரைப் பொருது வென்றோர்,
பேர்கெழு சிறப்பின் வந்த பெரும்புகழ் நிற்பது, ஐயன்
தார்கெழு திரள்தோள் தந்த புகழினைத் தழுவி’ என்பார். 96
மக்களின் ஈகைச் செயல்கள்
மைந்த! வறியோர் கொள வழங்கு’ என நிரைப்பார். 97
மின்பொருவு தேரின்மிசை வீரன் வரு போழ்தில்,
தன்பொருவில் கன்றுதனி தாவிவரல் கண்டாங்கு
அன்பு உருகு சிந்தையடும் ஆஉருகு மாபோல்,
என்பு உருக, நெஞ்சு உருகி, யார் உருககில்லார்? 98
‘சத்திரம் நிழற்ற, நிமிர் தானையடு நானா
அத்திரம் நிழற்ற, அருளோடு அவனி ஆள்வார்,
புத்திரர் இனிப் பெறுதல் புல்லிது’ என, நல்லோர்,
சித்திரம் எனத் தனி திகைத்து, உருகி, நிற்பார். 99
‘கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன்,
தேர்மிசை, நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ?
கூர் கனக ராசியோடு கோடிமணி யாலும்
தூர்மின், நெடு வீதியினை’ என்றுசொரி வாரும். 100
‘தாய் கையில் வளர்ந்திலன்; வளர்த்தது, தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள,
ஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால்,
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது?’ என்பார். 101
‘பாவமும் அருந் துயரும் வேர் பறியும்’ என்பார்;
‘பூ வலயம் இன்றுதனி அன்று; பொது’ என்பார்;
‘தேவர்பகை உள்ளன இவ் வள்ளல்தெறும்’ என்பார்;
‘ஏவல்செயும் மன்னர்தவம் யாவதுகொல்?’ என்பார். 102
இராமன் தயரதன் அரண்மனை அடைதலும், அங்கு அவனைக் காணாமையும்
பூண்டபுகழ் மன்னன் உறை கோயில்புகலோடும் 103
ஆங்குவந்து அடைந்த அண்ணல், ஆசையின் கவரி வீசப்
பூங்குழல் மகளிர் உள்ளம் புதுக்களி ஆட, நோக்கி
வீங்கிருங் காதல் காட்டி, விரிமுகம் கமல பீடத்து
ஓங்கிய மகுடம் சூடி, உவகைவீற்றிருப்பக் காணான். 104
இராமன் கைகேயின் அரண்மனை புகுதல்
பூத்தவை வடிவை ஒப்பான், சிற்றவை கோயில் புக்கான். 105
இராமன் கைகேயின் அரண்மனை சென்றதை புரவலர் போன்றோர் பாராட்டுதல்
மிக்கு உயர் மகுடம் சூட்டச் சூடுதல் விழுமிது’ என்றார். 106
இராமன் கைகேயியை சந்தித்தால்
தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள் 107
கைகேயியை வணங்கி இராமன் பணிவுடன் நிற்றல்
வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாசச்
சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து, மற்றைச்
சுந்தரத் தடக் கை தானை மடக்குறத் துவண்டு நின்றான் –
அந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான். 108
கைகேயின் வஞ்சக உரை
ஒன்று உனக்கு உந்தை, மைந்த! உரைப்பதோர் உரையுண்டு’ என்றாள். 109
மன்னவன் ஆணையை கூற இராமன் பணிந்துரைத்தல்
தந்தையும், தாயும், நீரே; தலைநின்றேன்; பணிமின்’ என்றான். 110
கைகேயி தெரிவித்த மன்னனின் ஆணை
ஏழ்-இரண்டு ஆண்டின் வா” என்று, இயம்பினன் அரசன்’ என்றாள். 111
கைகேயின் உரை கேட்ட இராமனது தோற்றப் பொலிவு
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா! 112
தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி,
இருளுடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான்,
உருளுடைச் சகடம் பூண், உடையவன் உய்த்த காரேறு
அருளுடை ஒருவன் நீக்க, அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான். 113
காட்டிற்கு செல்ல இராமன் கைகேயியினிடம் விடை கொள்ளுதல்
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.’ 114
கோசலையின் மாளிகைக்குள் இராமன் புகுதல்
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான். 115